ஹைதராபாத் மாநில மருத்துவனையிலிருந்து பிறந்து ஆறு நாளே ஆனா குழந்தையை கடத்திய பெண்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்ந்து குழந்தைகள் காணமால் போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. 


இந்நிலையில், நேற்று மகப்பேறு மருத்துவர் மருத்துவமனையில் உள்ள வார்டில் பிறந்து ஆறு நாட்கள் மட்டுமே ஆனா குழந்தை காணாமல் போனதாக புகார் வந்துள்ளது. இது குறித்து குழந்தையின் உறவினகளிடம் விசாரிக்கையில், மகப்பேறு வார்டில் பணிபுரிவதாக கூறி ஒரு பெண் வந்தார். அந்த பெண் தாயிடமிருந்து குழந்தையை வாங்கிகொண்டு தடுப்பூசி போடுவதற்காக செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தையின் தாயும் அவரை நம்பி குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். 


குழந்தையை தடுப்பூசி போடுவதகாக கொண்டுசென்ற அந்த பெண் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து, அவர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, காவல்துறையினர் மருத்துவமனையில் பொறுத்த பட்டிருந்த சி.சி.டிவி கேமிராவின் பதிவுகளை பார்த்துள்ளனர்.  


இதையடுத்து, PTI-யிடம் சுல்தான்பஜர் பிரிவு ஆணையர் எம்.செடானா கூறியபோது..! 


நாங்கள் மருத்துவமனையில் பொருத்தியுள்ள சி.சி.டிவி காட்சிகளை சரிபார்த்துள்ளோம். அந்த பெண் குழந்தையை மருத்துவமனைக்கு வெளியில் எடுத்து சென்றுள்ளார். அதன் பின்னர் ஒரு பெண் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிதர் மாவட்டம் என்ற பலகையை கொண்ட பேருந்தில் ஏறி இறங்குவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.