CCTV-யில் கேமிராவில் தனது குழந்தையின் அருகில் பேய் இருப்பதை கண்டு பதறிப்போன தாய்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், குழந்தையின் அருகில் பேய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது.


பேய் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஒரு சிறிய பயம் இருக்கும். பேய்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், நாம் தனிமையில் வீட்டில் இருக்கும் போது தெரியும் நாம் படும் பாடு. தூங்கவும் முடியாமல், முளித்திருக்கவும் முடியாமல் எப்போதுதான் விடியுமோ என்ற மனநிலை தோன்றி விடும். இந்த அனுபவத்தை ஒரு பெண் இரவு முழுவதும் அனுபவித்துள்ளார். ஆனால் முழு சூழ்நிலையின் யதார்த்தமும் நீங்கள் நினைப்பதை விட பைத்தியக்கரத்தனமாக இருந்துள்ளது. 


சமீபத்தில் ஒரு பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவு இணையதளத்தில் வைரளாகி வருகிறது. அந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்தால் நீங்கள் வயிறு வலிக்க சிரிப்பது நிச்சயம். அந்த பதிவில், "எனவே நேற்று இரவு நான் நேர்மறையாக இருந்தேன், என் மகனுடன் படுக்கையில் ஒரு பேய் குழந்தை இருந்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டேன், நான் இரவு முழுவதும் தூங்கவில்லை. நான் கூட என் மகன் தூங்கும் போது ஒளிரும் விளக்கைக் கொண்டு அங்கு ஊர்ந்து செல்ல முயன்றேன் இருந்தாலும் பயம் என்னை தடுத்தது. இதையடுத்து, அடுத்தநாள் காலையில், இது குறித்து விசாரிக்க முயன்றேன். இதையடுத்து, எனது கணவர் என் குழந்தையின் மெத்தையின் உரையை மாற்றும் போது தான் தெரிந்தது அந்த மெத்தையின் விளம்பர ஸ்டிகர் அது என்று. 



அது சரி. அது ஒரு படம் மட்டுமே.... மரிட்ஸா எலிசபெத் தனது குழந்தையின் எடுக்காதே உள்ளே ஒரு குழந்தையின் ஆவி இருப்பதாக நினைத்து ஒரு இரவு முழுவதும் விளித்திருந்துள்ளார். காலையில் அது மெத்தையின் லேபிளில் ஒரு படம் மட்டுமே என்பதை கண்டார். இவரின் தந்த முகநூல் பதிவு பலரின் கவனஹ்தையும் ஈர்த்துள்ளது. இதற்க்கு பலரும் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.