இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலம் புல்டானாவில் பிறந்த அபிஷேக் பாரத். இவரது தந்தை பெயர் பக்வத் பாரத். சிறு வயதி முதலே விஞ்ஞானி ஆகா வேண்டும் எனக் கனவு. நன்றாக படித்த அவர், 2008-ம் ஆண்டு பஞ்சமராவ் தேஷ்முக் கிரிஷி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்கா சென்று படித்த அபிஷேக் பாரத் முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார். 2013-ம் ஆண்டு டாக்டரேட் பட்டமும் பெற்றார். டாக்டரேட் பட்டத்தை பெற்று அதே பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் விஞ்ஞானியாக பணி ஆற்றுவதில் அவருக்கு திருப்தி இல்லாததால், இந்தியாவுக்கு திரும்பிய அவர், விவசாயம் செய்து ஆடு வளர்க்க துவங்கினார். ஆரம்பத்தில் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவத்தனர். ஆனால் தற்போது அவர்கள் அபிஷேக் பாரத்துக்கு ஆதராவாக உள்ளனர்.


20 ஏக்கர் நிலத்தினைக் குத்தகைக்கு எடுத்து 120 ஆடுகளுடன் பண்ணைத் தொடங்கிய அபிஷேக்கிடம் தற்போது 400-க்கு மேற்பட்ட ஆடுகள் உள்ளன. மாதம் லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ 12 லட்சம் வரும் வரை வருவாய் ஈட்டுகிறார் அபிஷேக் பாரத்.


தான் விஞ்ஞானி என்ற கர்வம் துளி கூட இல்லாமல் தானே இறங்கி அனைத்து விதமான பராமரிப்பு வேலைகளை செய்து வரும் இவர், விவசாயமும் செய்து வருகிறார்.


விஞ்ஞானி பணியை இராஜினாமா செய்துவிட்டு ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்