ரத்ததானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இன்று உலக ரத்த தானம் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயிர் காக்கும் ரத்த தானத்தின் மகத்துவத்தைச் சொல்லும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி 'உலக ரத்த தானம் செய்வோர் தினம்' கொண்டாடப்படுகிறது. தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


ரத்தப் பிரிவுகளான A, B, O உள்ளிட்டவற்றை கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் பிறந்த நாளான இன்று, அவரை கெளரவப்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பு 2004 ஆம் ஆண்டு முதல் ஜுன் 14 ஆம் தேதியை உலக ரத்த தானம் தினமாக கடைபிடிக்க அறிவித்தது. ரத்த தானம் செய்வதன் மூலம், நாம் உயிருக்கு போராடும் யாரோ ஒருவருக்கு உதவுகின்றோம். மக்களிடம் ரத்ததானம் செய்வது குறித்த விழுப்புணர்வு போதிய அளவு இல்லாததால், வருடந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் மூலம் மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


எதிர்பாராத விபத்து, மகப்பேறு, அறுவை சிகிச்சை போன்ற ஆபத்தான சூழல்களில் பாதிக்கப்பட்டவருக்கு கட்டாயம் ரத்தம் தேவைப்படுகிறது. இதுபோன்ற சூழல்களில் ரத்தத்தை சேமிக்கும் ரத்த வங்கிகள் நவீன மருத்துவத்துறையின் வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது.


ரத்த தானம் செய்வதால் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், இதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் வலுப்படும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.