இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி. அதுபோல தூக்கத்திலும் பாடலை கேட்டால், யாராக இருந்தாலும் ஆடாமல் இருக்க முடியாது. வசனம், பாடல், பின்னணி என்று, திரைப்படங்களில் இசை, முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல தலைமுறைகள் தாண்டிய இசையமைப்பாளர்கள், தமிழ் திரையுலகிற்கு, தங்கள் படைப்புகளை அளித்துக்கொண்டு வருகின்றனர். 


இவர்களின் படைப்புகளுக்கு மெருகூட்டும் வகையில், பாடகர்களும் உயிர் கொடுக்கின்றனர். மொழி வேறுபாடு அறியா இசைக்கு, உலகம் முழுவதுமுள்ள மக்கள் ரசிகர்களாகின்றனர். மைக்கேல் ஜாக்சன், இளையராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் அதற்கு சான்றே. இந்த பரந்த உலகத்தில் இசை இலாத இடமே கிடையாது என்று அடித்து கூறலாம். அனைவரும் கூறுவார்கள் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று அது போன்றுதான் இசையும் தூணிலும் உருவாகும் துரும்பிலும் உருவாகும். ஒரு மனிதன் எவ்வளவு கோவமாக இருந்தாலும் ஏதாவது ஒரு இசையை கேட்டால் போதும் நாணத்தில் எவ்வளவு பெரிய கவலையோ, சோகமோ என்னவாக இருந்தாலும் மறைந்து விடும் என்பதும் எழுதபடாத உண்மை. 


இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்றும் ஒரு பொருள் உண்டு. இசை என்பது சிறந்த கலைகளில் ஒன்று. மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.  சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். எனவே தான் உலகின் நிறைய இசைக்கலைஞர்கள் தங்களின் இசையால் மக்களை கட்டிபோட்டு வைத்திருகின்றனர்.   


இந்நிலையில், இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக  ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந் தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. இசையால் பல நோய்களை குணமாக்க முடியும் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் நிரூபித்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியடைந்த உலகத்தில், இசைக்கு அளவே இல்லை. இசையில்லாமல் நீண்ட தூரப் பயணத்தை யாராலும் நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுபோல் அமைதியிலும் இசையை ரசிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை