ஆறாண்டுகால பயணம்; மணிக்கு 7 லட்சம் கி.மீ வேகம் என சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை நாசா விண்ணில் ஏவுகிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை அறிவதற்கு கடந்த 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஹீலியோஸ்-1, ஹீலியோஸ்-2 செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் இணைந்து விண்ணில் செலுத்தியது. 


ஆனால், பூமியிலிருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற செயற்கைக்கோள் சூரியனிடமிருந்து சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து தான் ஆய்வு செய்ய முடிந்தது. இதனால் போதிய தகவல்களை திரட்டமுடியவில்லை. 1985 ஆம் ஆண்டு வரை தகவலை அனுப்பியது. பின்னர் அது செயலிழந்தது. 


இதையடுத்து, பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் தாங்கக்கூடிய, சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.  


இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது. ராக்கெட் புறப்பட ஒரு நிமிடம், 55 வினாடிகள் இருந்த போது, தொழில்நுட்ப பழுது கண்டுபிடிக்கப்பட்டதால் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான நேரத்தை 24 மணி நேரத்திற்கு ஒத்திவைத்து. 



இந்நிலையில், இன்று (ஆகஸ்ட்-12) 12.15 மணியளவில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் எடை 612 கிலோ. நீளம் 9 அடி, 10 இன்ச். 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும். இதற்காக கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். 


இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை.சூரியன் - பூமி இடையிலான துாரம் 14.9 கோடி கி.மீ. நமது பூமியின் பரப்பை வளிமண்டலம் சூழ்ந்திருப்பதை போல, சூரியனின் பரப்பை, 'கொரோனா' எனும் பிளாஸ்மா மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கொரோனாவுக்குள்ளேயே சென்று, இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.