ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் வளம் கொழிக்கும் நாடு. அங்கு நீர் வளம் என்றால் அது கடல்நீர் தான். அதிலும் சாதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறது துபாய். பாம் ஜுமேரா-வில் (Palm Jumeirah) உருவாக்கப்பட்டுள்ள நீரூற்று சமீபத்தில் உலகின் மிகப்பெரிய நீரூற்று என்ற கின்னஸ் சாதனையை பதிவு செய்தது. இது 7,327 m² பரப்பளவைக் கொண்டுள்ளது. 14,000 அடி கடல் நீரில் இந்த நீரூற்று பரந்து விரிந்துள்ளது. 105 மீட்டர் தொலைவுக்கு தண்ணீரை தெளிக்கும் திறன் கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டு கண்பவர் மனதை கொள்ளைக் கொள்கிறது இந்த பிரம்மாண்டமான நீரூற்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல வண்ண விளக்குகள் ஜாலம் புரிய, மிகப்பெரிய எஞ்சின்கள் நீரை வானில் ஊற்றாக பெருக்கெடுக்கச் செய்யும் போது, நீரில் வண்ணங்களும் சேர்ந்து சொர்க்கமே இதுதான் என்று சத்தியம் செய்கிறது.    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த புதிய நீரூற்று, அக்டோபர் 22ஆம் தேதியன்று உலகின் மிகப்பெரிய நீரூற்று என்ற கின்னஸ் உலக சாதனையைப் பதிவு செய்தது.


துபாயின் நீர்முனை (waterfront) பாம் ஜுமேரா பகுதியில் உள்ள The Pointe-யில் அமைந்துள்ள பாம் நீரூற்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிகழ்ச்சி உலகெங்கிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தனது மாயஜாலக் காட்சிகளால் அனைவரின் மனதையும் ஈர்த்த இந்த நீரூற்றை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை  யாராலும் அடக்க முடியாது.


4,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கடல் நீரில் அமைந்துள்ளது இந்த நீரூற்று என்று ரைக் கொண்டுள்ளது என்று நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த நீரூற்றை இயக்குவதற்கு 128 சூப்பர் ஷூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 105 மீட்டர் உயரம் வரை செல்லும் நீர் ஊற்றாக அங்கிருந்து வண்ணங்களுடன் சேர்ந்து பொழிந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.


பாம் நீரூற்று உலகின் மிகப்பெரிய நீரூற்றுக்கான கின்னஸ் உலக சாதனையையும் படைத்து நீரூற்றுகளின் மன்னனாக முடிசூடிக்கொண்டது.  2,519 சதுர மீட்டர் அளவைக் கொண்ட  தென் கொரியாவின் பான்போ மூன்லைட் ரெயின்போ நீரூற்றை (Banpo Moonlight Rainbow Fountain) பின்னுக்குத் தள்ளி தற்போது பாம் நீரூற்று, உலகின் மிகப்பெரிய நீரூற்று என்ற சாதனை படைத்திருக்கிறது.    


Read Also | Bhutanஇல் இந்திய நீர்மின் திட்ட கட்டுமானத்திற்கு Brunel Medal-2020


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR