7th Pay Commission: மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் மீண்டும் உயர்வு!
7th Pay Commission update: மத்திய ஊழியர்களுக்கு குழந்தைகளின் கல்விக்கான hildren Education Allowance கிடைக்கும்.
புதுடெல்லி: 7th Pay Commission: கோடிக்கணக்கான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) கிடைத்த பிறகு, தற்போது மற்றொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை (CEA) பெற முடியாமல் இருந்த ஊழியர்கள், தற்போது அவை பெற உள்ளனர். இதற்கு உங்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்கள் கூட தேவையில்லை.
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களும் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையைப் பெறுகிறார்கள், இது மாதத்திற்கு ரூ.2,250. ஆனால், கடந்த ஆண்டு முதல், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மத்திய ஊழியர்கள் CEA ஐ கிளேம் செய்ய முடியவில்லை.
ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு
குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெற, மத்திய ஊழியர்கள் பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் இருந்து பெறப்பட்ட அறிவிப்பில், குழந்தை தங்கள் நிறுவனத்தில் படிப்பதாக எழுதப்பட்டு இருக்கும். இதனுடன் நீங்கள் படித்த கல்விக் காலண்டரும் குறிப்பிடப்பட்டு இருக்கும். CEA உரிமைகோரலுக்கு, குழந்தையின் அறிக்கை அட்டை, சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.
ஜூலையில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஒரு அலுவலகம் (OM) வெளியிட்டது. அதில், கொரோனா பாதிப்பால், குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதில் மத்திய பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். ஏனெனில், ஆன்லைனில் கட்டணத்தை டெபாசிட் செய்த பிறகும், முடிவுகள்/அறிக்கை அட்டைகள் பள்ளியிலிருந்து எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படவில்லை.
CEA உரிமைகோரலை சுய அறிவிப்பு மூலமாகவோ அல்லது முடிவு/அறிக்கை அட்டை/எஸ்எம்எஸ்/கட்டணம் செலுத்திய மின்னஞ்சலின் பிரிண்ட் அவுட் மூலமாகவும் கோரலாம் என்று DoPT கூறியுள்ளது. இருப்பினும், இந்த வசதி மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 இல் முடிவடையும் கல்வியாண்டுக்கு மட்டுமே கிடைக்கும்.
ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR