புதுடெல்லி: முத்தேவர்களில், விஷ்ணு, பல பெயர்களால் அறியப்படுகிறார். ஸ்ரீ ஹரியின் இந்தப் பெயர்களில் ஒன்று கமலக்கண்ணன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமலக்கண்ணன் என்ற பெயரை பெருமாள் எப்படி பெற்றார் என்பது சுவராசியமான விஷயமாக புராணங்களில் இடம் பெற்றிருக்கிறது. ஆச்சரியமான இந்த சம்பவம் உங்களுக்குத் தெரியுமா?  


விஷ்ணு பகவான், தனது கோரிக்கைக்காக தனது கண்மலரை அர்ப்பணித்த கதை இது.  ...


தேவர்களும் அசுரர்களின் கொடுமையும்
புராணங்களின் படி, அசுரர்களின் கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட தேவர்கள்,  விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர். அப்போது, சிவனிடமிருந்து (Lord Shiva) வரத்தைப் பெறுவதற்காக விஷ்ணு கடும் தவம் செய்தார். 


ALSO READ | ராகு பெயர்ச்சியால் ராசி மாறும் ராசிக்காரர்கள்! நீங்கள் கும்ப ராசியா? இல்லை மிதுனமா? 


முக்கண்ணனான கடவுள் சிவனுக்கு, விஷ்ணு பகவான் 1000 தாமரை மலர்களைக் கொண்டு பூஜிக்க நினைத்தார். அப்போது, தனது திருவிளையாடலை நிகழ்த்த நினைத்த சிவபெருமான், ஆயிரத்தில் இருந்து ஒரு தாமரை மலரை மறையச் செய்தார்.


தாமரை மலர்களை அர்ப்பணித்தபோது, 999 தாமரை மலர்களே இருந்தது. ஆயிரத்திற்கு ஒரு பூ குறைவதைக் கண்ட நீல மேக ஷ்யாமளன், ஒரு கணமும் யோசிக்காமல், தனது தாமரைக்கு நிகரான கண்ணை எடுத்து மலராக அர்ப்பணித்தார்.


இதனால்தான் விஷ்ணுவுக்கு கமலக்கண்ணன் என்று பெயர் வந்தது, விஷ்ணுவை சோதிக்க சிவன் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. 


விஷ்ணு பகவானின் அர்ப்பணிப்பை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் (Lord Shiva), சுதர்சன சக்கரத்தை வழங்கினார். அதன் பிறகு விஷ்ணு சுதர்சன சக்கரத்தால் அசுரர்களைக் கொன்று தேவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.


அது மட்டுமல்ல, விஷ்ணுவின் கண்மலர் அர்ச்சனையைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், மூவுலகையும் காக்கும் பொறுப்பையும் விஷ்ணுவிடம் ஒப்படைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.


ALSO READ | இந்த ராசிப்பெண்கள் அப்பாக்களின் செல்ல மகள்கள்: அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR