முந்துங்கள்: Xiaomi-யின் தள்ளுபடி விற்பனை துவங்கியது!
`Mi Exchange` திட்டமானது Cashify உடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்றது.
ஜியோமி பரிமாற்றம், ஜியோமி, ஸ்மார்ட்போன், Mi பரிமாற்றம், ஜியோமி, Xiaomi Mi Exchange, Xiaomi, smartphone, Mi Exchange, Cashify,
சீன கைபேசி தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
"Mi Exchange" எனும் இத்திட்டத்தின் மூலம் பயனர்கள் தங்களது பழைய கைப்பேசிகளை, மாற்றி புது கைப்பேசிகளை பெற்றுக்கொள்ளலாம்.
"Mi Exchange" திட்டமானது Cashify உடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்தினை அனுபவிக்க பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை அருகில் இருக்கும் Mi வாடிக்கையாளர் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர்களின் தொலைபேசியின் நிலைமையை பொறுத்து, Cashify குழு பழைய மொபைலுக்கு ஒரு பொருத்தமான விலையை நிற்நயிக்கும்.
தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் பயனர்களின் கைபேசிகளுக்கு விலை நிற்நயிக்கப்படும், மேலும் அதன் அடிப்படையிலேயே புதிய Xiaomi ஸ்மார்ட்போன் மீது தள்ளுபடி சதவிகிதம் பட்டியளிடப்படும்.
இது குறித்து Xiaomi தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது!