Aadhaar - DL link: ஓட்டுநர் உரிமத்தை ஆதார் உடன் இணைப்பதால், போலி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமங்கள் வைத்திருப்பவர்களுக்கு தடை விதிக்கப்படுவதோடு. ஊழலும் முடிவுக்கு வரும்  என்பதாலும், ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும் என்பதாலும், ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பது கட்டாயமாகும் .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் அட்டை (Aadhaar Card) ஒரு முக்கியமான ஆவணம், அதனுடன் மற்ற ஆவணங்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது பான் கார்டாக இருந்தாலும் சரி, ஓட்டுநர் உரிமமாக இருந்தாலும் சரி, அதை இணைத்த பின்னரே, அவை தொடர்பான வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் (Corona Pandemic) ஓட்டுநர் உரிமத்தை ஆதார் உடன் இணைப்பது எப்படி  என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். எனவே கேள்விக்கான பதில் உங்கே உள்ளது. வீட்டில் அமர்ந்து ஆதார்  அட்டையுடன், ஓட்டுநர் உரிமத்தை (DL) எவ்வாறு இணைப்பது என்பதை இன்று நாங்கள் உங்களுக்கு கூறுவோம்.


ALSO READ | Aadhaar Card: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி..!


 


ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டையுடன் இணைத்தல்


1. ஆதார் அட்டையுடன் உரிமத்தை இணைக்க, முதலில் மாநில போக்குவரத்து துறையின் இணையதளத்திற்கு செல்லவும்.


2. இங்கே ஆதார் (Aadhaar) இணைப்பைக் கிளிக் செய்த பின், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஓட்டுநர் உரிமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


3. இதைச் செய்த பிறகு, உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிட்டு, Get Details என்பதைக் கிளிக் செய்யவும்.


4. இங்கே உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.


5. இந்த செயல்முறையை முடிக்க "submit" என்பதைக் கிளிக் செய்யவும்.


6. இதைச் செய்த பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும்.


7. இப்போது OTP ஐ உள்ளிட்டு உங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் உடன் இணைக்கும் செயல்முறையை முடிக்கவும்.


இதை செய்த பின் உங்கள் ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் விபரம் இணைக்கப்பட்டு விடும்.


ALSO READ | Aadhaar அட்டையில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா; நொடியில் மாற்றலாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR