Aadhaar Card: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி..!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை தயாரிக்க  கைரேகை மற்றும் கண் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 29, 2021, 04:51 PM IST
  • ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது.
  • உங்கள் குழந்தை, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால், பயோமெட்ரிக் தரவு இல்லாமல் ஆதார் அட்டை பெறலாம்.
Aadhaar Card: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி..! title=

ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஆதார் அட்டை (Aadhaar Card) ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டை என்பது ஒரு ஆவணம் மட்டுமல்ல, அடையாள அட்டை. எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கும் அரசாங்க திட்டங்களின் நன்மைகளைப் பெறுவதற்கும் ஆதார் மிகவும் முக்கியமானது.

ஆதார் அட்டையில் (Aadhaar Card) உங்கள், பெயர், முகவரி தகவல்களை மட்டுமல்லாமல், நபரின் பயோமெட்ரிக் தகவல்களையும் கொண்டுள்ளது. இப்போது ஆதார் அட்டை குழந்தைகளுக்கும் சமமான அளவில் முக்கியமானது. இது அவர்களின் பள்ளி சேர்க்கை போன்ற விஷயங்களில் பயனுள்ளதாக இருக்கும். 

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை தயாரிக்க  கைரேகை மற்றும் கண் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. அதாவது, பயோமெட்ரிக் தரவு இல்லாமல், ஆதார் தயாரிக்கலாம். இது பால் ஆதார் என்றும் அழைக்கப்படுகிறது.

ALSO READ | Aadhaar அட்டையில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா; நொடியில் மாற்றலாம்..!!

உங்கள் பிள்ளைக்கு ஐந்து வயதுக்கு குறைவாக இருந்தால்,  பால் ஆதார் பெறலாம். குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் நீல நிறத்தில் இருக்கும். பால் ஆதாருக்கு குழந்தையின் அடையாளம்  தேவைப்படும் இடங்களில், அவரது பெற்றோர் அவருடன் செல்ல வேண்டும். ஆனால் குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும் போது, ​​அவர் அருகிலுள்ள நிரந்தர ஆதார் மையத்திற்குச் சென்று அதே ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் பெற வேண்டும்.

பால் ஆதார் பெறுவது எப்படி

முதலில் விண்ணப்பதாரர் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திஒற்கு செல்ல வேண்டும். இங்கே முகப்பு பக்கத்தில், 'Get AAdhaar' என்பதிலிருந்து 'Book an appointment' என்பதைக் கிளிக் செய்க. அந்த பக்கம் தோன்றிய பிறகு, உங்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் ஆதார் மையத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் அப்பாயிண்ட்மெண்டை பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் மொபைல் எண்ணை தந்த பிறகு கிடைக்கும் OTP ஐ உள்ளிட்டு, அப்பாயிண்ட்மெண்ட் தேதியை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி

பால் ஆதாருக்கு விண்ணப்பிக்க, உங்களது மற்றும் குழந்தையின் ஆவணங்களை ஆதார் மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் பதிவு படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த படிவத்தில், உங்கள் குழந்தையின் பெயர், பெற்றோரின் ஆதார் எண் மற்றும் பிற தகவல்களை கொடுக்க வேண்டும். இப்போது நீங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழையும், பெற்றோர்களில் ஒருவரின் ஆதார் எண்ணையும் மையத்திற்குச் சென்று கொடுக்க வேண்டும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் 60 நாட்களுக்குப் பிறகு ஒரு எஸ்எம்எஸ் வரும். பதிவுசெய்த 90 நாட்களுக்குள் பால் ஆதார் உங்களுக்கு அனுப்பப்படும்.

ALSO READ | DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News