அஞ்சல் அலுவலக மாத வருமான திட்டம்: தபால் அலுவலகம் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. நீங்கள் பாதுகாப்பாகவும் ஆபத்து இல்லாமல் முதலீடு செய்ய திட்டமிட்டால், நீங்கள் தபால் அலுவலக மாத வருமான திட்டத்தில் (MIS) முதலீடு செய்யலாம். இது ஒரு தபால் அலுவலக சேமிப்பு திட்டம் (Post Office Saving Scheme) ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், நீங்கள் நேரடியாக மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் வட்டியின் லாபத்தை (Earn Interest) சம்பாதிக்கலாம். ஒவ்வொரு திட்டத்தையும் போலவே, இதிலும் முதலீடு செய்வதற்கு சில நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. ஒரு நபர் விதிமுறை மற்றும் நிபந்தனையை பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே தகுதியானவர் என்று கருதப்படுவார்கள். 18 வயதுக்கு மேல் (Adult) உள்ளவர்கள் அல்லது மைனர் (Minor) இருவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். குழந்தையின் பெயரிலும் கணக்கைத் திறக்கலாம். குழந்தையின் பெயரில் கணக்கைத் திறந்தால், அந்த சேமிப்பு கணக்கை பெற்றோர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.


ALSO READ |  Post Office RD Interest Rate: RD வட்டி விகிதத்தில் மாற்றம் -முழு தகவல் இங்கே!


இத்திட்டத்தின் கீழ், நீங்கள் குறைந்தபட்சம் 1500 ரூபாயில் கணக்கைத் திறக்கலாம், அதே நேரத்தில் அதிகபட்ச வைப்புத்தொகை ரூ .4.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். தனியாகவோ (Individual Account) அல்லது இணைந்தோ (Joint Account) கணக்கைத் திறக்க முடியும். கூட்டுக் கணக்கில் (Joint Account) அதிகபட்ச டெபாசிட் ரூ .9 லட்சம் ஆகும்.


இந்த திட்டத்தின் முதிர்வு காலம் (Maturity Period) ஐந்து ஆண்டுகள். ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் பிறகு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கான வட்டி கணக்கிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. நீங்கள் அதை மாத அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். தற்போது, ​​செலுத்தப்படும் வட்டி (Interest Rate) ஆண்டுக்கு 7.7% ஆகும்.


அலுவலக மாத வருமான திட்டத்தை தவிர, தொடர்ச்சியான வைப்புத்தொகை கணக்கு (Recurring Deposit Account), பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund), கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra), சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana), நிலையான வைப்பு கணக்கு (Fixed Deposit Account) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) கணக்கை தபால் அலுவலகத்தில் திறக்கலாம் இருக்கிறது.


ALSO READ |  Post Office RD Scheme: உங்களின் 50 ஆயிரம் பணத்தை 16 லட்சமாக்கலாம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR