LPG சிலிண்டர் முன்பதிவில் ₹900 சேமிக்கலாம்; Paytm வழங்கும் அசத்தல் சலுகை
LPG சிலிண்டரின் விலை உச்சத்தில் உள்ளது. ஆனால், உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் Paytm, சிலிண்டர் புக்கிங்கில் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது.
LPG Booking offer: எல்பிஜி சிலிண்டரின் விலை உச்சத்தில் உள்ளது. ஆனால், உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் Paytm, சிலிண்டர் புக்கிங்கில் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் நீங்கள் சிலிண்டர் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம்.
எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக்
ஐ.ஓ.சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து Paytm வழங்கும் இந்த சலுகை குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. சிலிண்டர் முன்பதிவில் இந்த சலுகை குறித்த தகவல்களில், பேடிஎம் மூலம் இந்தேன் எல்பிஜி ரீஃபில் முன்பதிவு செய்யப்படும் போது, ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம் எனக் கூறி, சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான இணைப்பையும் ஐ.ஓ.சி வழங்கியுள்ளது.
நீங்கள் ஒரு Paytm பயனராக இருந்தால், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முதல் முறையாக Paytm செயலியின் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது இந்த சலுகை கிடைக்கும். சிறப்பு என்னவென்றால், 3 எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம். இது தவிர, பயனர்கள் அஷ்யூர்ட் Paytm பர்ஸ்ட் பாயிண்டுகளையும் பெறுவார்கள், இது அவர்களின் வாலெட் பேலன்ஸ் தொகையில் ரிடீம் செய்யலாம்.
முன்பதிவு செய்வது எப்படி?
1. இந்த சலுகைக்கு, முதலில் உங்கள் மொபைல் தொலைபேசியில் Paytm செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. இப்போது உங்கள் எரிவாயு நிறுவனத்தில் சிலிண்டரை முன்பதிவு செய்யுங்கள்.
3. இதற்காக, Paytm செயலியில் Show more என்பதைக் கிளிக் செய்து, Recharge and Pay Bills என்பதைக் கிளிக் செய்க.
4. இப்போது நீங்கள் book a cylinder ஆப்ஷனை காண்பீர்கள், இதற்குச் சென்று உங்கள் எரிவாயு சப்ளையரை தேர்ந்தெடுக்கவும்.
5. உங்கள் எரிவாயு சப்ளையரை, தேர்ந்தெடுக்க அங்கு நீங்கள் பாரத் கேஸ்(Bharat Gas), இந்தேன் கேஸ் (Indane Gas) மற்றும் ஹெச்பி கேஸ் (HP Gas) ஆகிய மூன்று ஆப்ஷன்கள காண்பீர்கள்
6. எரிவாயு சப்ளையரை தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி அல்லது வாடிக்கையாளர் எண்ணை உள்ளிடவும்
7. இப்போது Proceed பட்டனைக் கிளிக் செய்து பணம் செலுத்துங்கள்.
8. முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டர் உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து சேரும்.