புதுடெல்லி: உங்களிடம் வங்கிக் கணக்கு இருந்தால், இலவச ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். இந்த சிறப்பு அம்சத்தைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திடீரென்று பணத் தேவை ஏற்பட்டால், என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து போய் நிற்க வேண்டியிருக்கும். அவசரத் தேவைகளுக்கு பொதுவாக நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்க வேண்டியிருக்கும். 


உங்களிடம் வங்கிக் கணக்கு இருந்தால், இலவச ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். ஓவர் டிராஃப்ட் வசதி குறுகிய கால கடனைப் போன்றது. இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணத்தை எடுக்க முடியும். 


அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் ஓவர் டிராஃப்ட் வசதி உள்ளது. பெரும்பாலான வங்கிகளில், இந்த வசதி நடப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு அல்லது நிலையான வைப்புத்தொகை கணக்கில் கிடைக்கிறது. சில வங்கிகளில், பங்குகள், பத்திரங்கள், சம்பளம், இன்சூரன்ஸ் பாலிசி, வீடு, சொத்து போன்றவற்றிலும் ஓவர் டிராஃப்ட் கிடைக்கிறது.


Also Read | தபால் அலுலவலகத்தின் சூப்பர் ஹிட் திட்டம்: சிறிய சேமிப்பு, பெரிய லாபம்


முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரம்பு
வழக்கமாக, வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம் என்று செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் தெரிவிக்கும். இந்த ஓவர் டிராஃப்டின் வரம்பு எவ்வளவு என்பதை வங்கி ஏற்கனவே தீர்மானித்திருக்கும். 


திடீர் செலவு ஏற்படும் போது இந்த சம்பள ஓவர் டிராஃப்ட் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதந்தோறும் EMI, SIP போன்ற தவணைத்தொகைகள் வங்கியில் இருந்து பணம் கழிக்க வேண்டியிருந்தால், பணம் இல்லாமல் அவை பவுன்ஸ் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த இக்கட்டான நிலையைத் தவிர்க்கலாம்.


ஓவர் டிராஃப்ட் செயல்முறை
அவசர நேரத்தில் பணத் தேவை ஏற்பட்டால், மற்ற கடனுக்கு விண்ணப்பிப்பது போல், வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். மாதந்திர சம்பளம் மற்றும் நடப்புக் கணக்கு உள்ளவர்களுக்கு இந்த வசதி கிடைப்பது எளிதாக இருக்கும். 


ஓவர் டிராஃப்ட் வசதி பெற்றுக் கொண்டால், வங்கிக் கணக்கில் பணம் (Amount in Bank Account) இல்லாவிட்டாலும், தேவைப்படும் நேரத்தில் வங்கியிலிருந்து பணத்தை எடுக்கலாம்.  இது நீங்கள் பின்னர் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக இருப்பதோடு இதற்கு வட்டியும் உண்டு.


READ ALSO | வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பயன்களை வழங்கும் SBI வங்கியின் 3-in-1 வசதி!


ஓவர் டிராஃப்டில் எவ்வளவு வட்டி வசூலிக்கப்படும் என்பது வழங்கப்படும் தொகையை பொறுத்தது. ஓவர் டிராஃப்டுக்காக நீங்கள் பிணை அல்லது அடமானமாக வைத்திருக்கும் சொத்ததைப் பொறுத்து வட்டி நிர்ணயிக்கப்படும். 


ஓவர் டிராஃப்ட் வசதியை பெறுவதற்கு,  வைப்புத்தொகை, பத்திரங்கள் அல்லது பங்குகள் போன்ற ஏதாவது சொத்தை வங்கியிடம் அடமானம் வைக்க வேண்டும். அதேபோல, சொத்தின் மதிப்புக்கு ஏற்றாற்போல, பண வரம்பை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். 


உதாரணமாக, வங்கியில் ரூ.2 லட்சம் வைப்புத்தொகை வைத்திருப்பவர்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை ஓவர் டிராஃப்டைப் பெறலாம். பங்குகள், பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் இந்தத் தொகை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.


பொதுவாக, வங்கிகள் உங்கள் சம்பளக் கணக்கிற்கு ஓவர் டிராஃப்ட் வசதியைக் கொடுக்கின்றன. அதன் அதிகபட்ச வரம்பு, சம்பளத்தின் 2 முதல் 3 மடங்கு சம்பளமாக இருக்கலாம். இந்த வகை ஓவர் டிராஃப்ட் வசதிக்கு, உங்கள் சம்பளக் கணக்கு அதே வங்கியில் இருக்க வேண்டும். அதில் இருந்து ஓவர் டிராஃப்ட் எடுக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் எஸ்பிஐயில் சம்பளக் கணக்கு வைத்திருந்தால், ஓவர் டிராஃப்ட்டிற்கு குறைந்தபட்சம் 6 மாத சம்பளம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்திருக்கவேண்டும்.  


ALSO READ | Post Office சூப்பர் திட்டம், ரூ10,000 வீதம் முதலீடு; ரூ16 லட்சம் ரிட்டன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR