வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பயன்களை வழங்கும் SBI வங்கியின் 3-in-1 வசதி!

SBI 3-in-1 கணக்கு வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் சிறந்த அம்சங்கள் வாடிக்கையாளருக்கும் மேலும் பல வசதிகளைத் தருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2021, 08:38 AM IST
  • எஸ்பிஐயின் புதிய வசதி
  • 3-in-1 கணக்கு
  • பங்குச் சந்தையில் எளிதாக முதலீடு செய்யலாம்
வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பயன்களை வழங்கும் SBI வங்கியின் 3-in-1 வசதி!   title=

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI,தனது வாடிக்கையாளர்களுக்கு 3-இன்-1 கணக்கு வசதியை வழங்கியுள்ளது. சேமிப்பு கணக்கு, டிமேட் கணக்கு மற்றும் வர்த்தக கணக்கு ஆகியவற்றை இணைக்கும் இந்த வசதி பலருக்கு பயனளிக்கும்.

இ-மார்ஜின் (E-Margin) வசதி மூலம் வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதி மூலம், வாடிக்கையாளர்கள் காகிதமில்லா வர்த்தகத்தை சுலபமாக மேற்கொள்ளலாம்.

இந்தக் கணக்கைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இதில், புதிய வங்கிக் கணக்கு வசதியுடன் (new banking facility), டிமேட் மற்றும் வணிக கணக்கின் பலனும் கிடைக்கும். 

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, டிமேட் மற்றும் டிரேடிங் கணக்கு வைத்திருப்பது அவசியம். இந்த 3-இன்-1 கணக்கில் கணக்குகளைத் திறக்கும் வாடிக்கையாளர்கள், ஆரம்ப பொதுச் சலுகையில் (Initial Public Offer (IPO)) முதலீடு செய்வதன் மூலம் பட்டியலிடுவதன் மூலம் பயனடையலாம். வாடிக்கையாளர்கள் இந்த 3-இன்-1 கணக்குகளை இ-மார்ஜின் வசதியுடன் திறக்கலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்து புதிய வசதி தொடர்பான தகவலை அளித்துள்ளது. "3-இன்-1 இன் ஆற்றலை அனுபவியுங்கள்! சேமிப்புக் கணக்கு, டீமேட் கணக்கு மற்றும் வர்த்தகக் கணக்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்து எளிய மற்றும் காகிதமில்லா வர்த்தக அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் ஒரு கணக்கு" என்று அந்த டிவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நீங்கள் எஸ்பிஐயின் 3-இன்-1 கணக்கைத் திறக்க விரும்பினால், உங்களிடம் சில முக்கியமான ஆவணங்கள் இருக்க வேண்டும்.

ALSO READ | SBI FD Interest Rates: SBI வாடிக்கையாளர்களுக்கு பம்பர் பரிசு 

1. பான் கார்டு அல்லது படிவம் 60 (PAN or Form 60)
2. புகைப்படம்
3. பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, MGNREGA வழங்கிய வேலை அட்டை அல்லது பெயர் மற்றும் முகவரியின் விவரங்களைக் கொண்ட தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட கடிதம் போன்ற முகவரி ஆதாரத்திற்கான செல்லுபடியாகும் ஆவணங்கள் இருந்தால்போதும்.

எஸ்பி டிமேட் மற்றும் டிரேடிங்கிற்கு தேவையான ஆவணங்கள்

- பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (ஒன்று)
பான் கார்டு நகல்
ஆதார் அட்டை நகல்
- ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது சமீபத்திய வங்கி அறிக்கை

ALSO READ | Fixed Deposit-க்கு மிக அதிக வட்டி அளிக்கும் வங்கிகள்

இ-மார்ஜின் வசதி என்றால் என்ன?

இ-மார்ஜின் வசதியின் கீழ், குறைந்தபட்சம் 25 சதவீத மார்ஜினுடன் வர்த்தகம் செய்யலாம்.  பணம் அல்லது பிணையத்தைப் பயன்படுத்தி ஒருவர்  தேவையான மார்ஜினைப் 30 நாட்கள் வரை நீட்டிக்க முடியும்.

இந்தக் கணக்கைப் பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
படி 1: எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் இணைய தளத்தின் மூலம் வர்த்தக கணக்கில் உள்நுழையவும்.
படி 2: ஆர்டர் பிளேஸ்மென்ட் (வாங்க / விற்க) மெனுவிற்குச் செல்லவும்.
படி 3: ஆர்டர் போடும்போது, ​​தயாரிப்பு வகையை இ-மார்ஜினாக தேர்ந்தெடுக்கவும்.

மேலதிக தகவலுக்கு, SBI bank.sbi இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து தேவையான விவரங்களைப் பெறலாம்.

ALSO READ | நீங்கள் SBI வாடிக்கையாளரா? உங்களுக்கான முக்கியமான செய்தி இது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News