பிரபல Youtuber வீடியோ படபிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் 25 கோடி ரூபாய் சேதம்
17 வயதான யூடியூபர் கேஜ் கில்லியன், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற ஒரு வீடியோ படபிடிப்பின்போது 3.4 மில்லியன் (இந்திய மதிப்பில் 25 கோடி ரூபாய்) மதிப்புள்ள தனது தந்தையின் பகானி ஹூயரா ரோட்ஸ்டரை (Pagani Huayra Roadster) அடித்து நொறுக்கினார். கேஜ் கில்லியன் மற்றும் அவரது நண்பர்கள் உயிர் மயிரிழையில் தப்பித்தது.
17 வயதான யூடியூபர் கேஜ் கில்லியன், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற ஒரு வீடியோ படபிடிப்பின்போது 3.4 மில்லியன் (இந்திய மதிப்பில் 25 கோடி ரூபாய்) மதிப்புள்ள தனது தந்தையின் பகானி ஹூயரா ரோட்ஸ்டரை (Pagani Huayra Roadster) அடித்து நொறுக்கினார். கேஜ் கில்லியன் மற்றும் அவரது நண்பர்கள் உயிர் மயிரிழையில் தப்பித்தது.
வீடியோத் தளமான யூடியூப் (YouTube), பணம் சம்பாதிப்பதற்கும், துரிதமாக பிரபலமடைவதற்கும் பெயர் பெற்றது. உலகெங்கிலும் உள்ள ஏராளமான யூடியூப் பிரியர்களை திருப்திப்படுத்த இந்த்த் துறையில் உள்ளவர்கள் கடும் சிக்கல்களையும் சமாளிக்கின்றனர். பல சமயங்களில் ஹிட்ட்டிக்கும் முயற்சிகள், சில சமயங்களில் சொதப்பி விடுகின்றன. இது ஒருசில சமயங்களின் உயிருக்கே உலை வைக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் 17 வயதான யூடியூபர் கேஜ் கில்லியன் இப்படி ஒரு அபாயகரமான விஷயத்தில் ஈடுபட்டார். தனது நண்பருடன் சேர்ந்து 3.4 மில்லியன் டாலர் மதிப்புள்ள தனது தந்தையின் பகானி ஹூயரா ரோட்ஸ்டரை ஒரு வீடியோ படப்பிடிப்பில் அடித்து நொறுக்கினார்.
விபத்துக்கு முன்னர் படமாக்கப்பட்ட வீடியோவை கேஜ் கில்லியன் நீக்கிவிட்டார். விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார், அதில் அவர் விபத்து மற்றும் காயங்கள் பற்றிய தகவல்களை கொடுத்திருந்தார். கார் விரும்பியான அவர் தனது நண்பர் ஜாக் (Zack) உடன் சேர்ந்து ஒரு வீடியோவை தயாரிப்பதாக தெரிவித்தார்.
சில நேரங்களில் வாகனங்கள் எதிர்பாராத விபத்துகளையும் ஏற்படுத்தும் என்பதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. தனது தவறினால் தான் விபத்து நேரிட்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
சரி, விபத்து எப்படி நடைபெற்றது? அதையும் வீடியோவில் அவரே சொல்கிறார்... காரை வெளியே எடுக்கும்போது மிகவும் வேகமாக எடுத்துவிட்டார். மணிக்கு 40 மைல் வேகத்தில் சென்றபோது, இடதுபுறம் திரும்பியபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கார், மரத்தில் மோதியது.
தங்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்வதாக கூறும் யூடியூபர், அவசரகதியில் காட்டுத்தனமாக வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார், வாகனங்களை மாற்றிவிடலாம், ஆனால் மனிதர்களை மாற்ற முடியாது என்ற இயல்பான, ஆனால் தாக்கம் மிகுந்த உணர்வுபூர்வமான விழிப்புணர்வு செய்தி அது.
தனது நண்பர் Zack Walker காயமடைந்த்தாகவும் அவரது கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டதோடு, நாக்கிலும் அடிபட்டு காயங்கள் ஏற்பட்டதாக Gauge Gillian தெரிவித்தார். விபத்து நடந்த இடத்தில் சிலர் விபத்தில் சிக்கிய வாகனத்தின் பாகங்களை எடுத்துச் சென்றதையும் கண்டார். அவர்கள், அந்த உதிரிபாகங்களை விற்றால் கொஞ்சம் பணம் தேற்றலாம் என்று நினைத்ததாகவும் Gauge Gillian கூறுகிறார்.
கேஜ் கில்லியன் தற்போது யூடியூபில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார். இந்த விபத்தில் இருந்து பிறர் பாடம் கற்றுக் கொள்வார்கள், எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று அவர் நம்புகிறார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR