ரசிகர்கள் மனதை கவர்ந்த `குற்றமே தண்டனை` உங்கள் ZeeTamil-ல்!
`குற்றமே தண்டனை` என்பது 2016-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர் மணிகண்டன். எம் ஆவார். இத்திரைப்படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை டான் புரடக்சன், டிரைபல் ஆர்ட் புரடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன.
"குற்றமே தண்டனை" என்பது 2016-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர் மணிகண்டன். எம் ஆவார். இத்திரைப்படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை டான் புரடக்சன், டிரைபல் ஆர்ட் புரடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன.
நாயகன் விதார்த்துக்கு கண் பார்வையில் சிக்கல். அவரது பார்வை வீச்சின் சுற்றளவு மிகவும் குறைவு. குழாய் வழியாகப் பார்ப்பதைப்போலதான் அவரால் பார்க்க முடியும். பக்கவாட்டுக் காட்சிகள் தெரியாது. படிப்படியாக அந்தப் பார்வைத் திறனும் மறைந்துவிடும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே தீர்வாக இருக்கும் என்கிறார் மருத்துவர். இதற்கு அவரது வருமானத்துக்கு மீறிய பெரும் தொகை தேவைப்படுகிறது.
விதார்த் வசிக்கும் வீட்டின் எதிரில் கீழ்தளத்தில் வசிக்கிறார் ஐஸ்வர்யா. அவரது வீட்டுக்கு ரகுமானும் மற்றொரு இளைஞரும் அவ்வப் போது வந்து போகின்றனர். திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு என்ன நடந்தது, கொலை செய்தது யார், இதற்கும் விதார்த்தின் கண் பிரச்சினை தீர்ந்ததா என்பதே கதை.
இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றது. தற்போது இந்த படம் ZeeTamil தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு அரங்கேற்றப்படுகிறது.