ஜீலின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக புனித் கோயங்கா தொடர்வது குறித்து ZEEL கூறியதை ரிலையன்ஸ் வெளியிட்ட அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது ஊடக சொத்துக்களை ஜீ உடன் இணைக்க முன்மொழிந்ததாகக் கூறிய ரிலையன்ஸ், ஆனால் ஜீ குழுமத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்த முடிவை கைவிட்டதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதன்கிழமையன்று தெரிவித்தது.   


தொலைக்காட்சி நிறுவனத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய உதவும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை இன்வெஸ்கோ அறிவித்த சில மணிநேரங்களில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தனது நிலையை தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது.


Also Read | ZEEL நிறுவனத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்த முயன்ற Invesco சதி அம்பலம்!


"ஜீ மற்றும் இன்வெஸ்கோ இடையேயான விவகாரத்தில் எங்கள் பெயரும் அடிபடுவது வருத்தமாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகள் சரியானதாக இல்லை" என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"ரிலையன்ஸ் எப்போதுமே முதலீட்டாளர் நிறுவனங்களின் தற்போதைய நிர்வாகத்தைத் தொடரவும், அவர்களின் செயல்திறனுக்காக அவர்களுக்கு வெகுமதி அளிக்கவும் முயற்சிக்கிறது. அதன்படி, திரு கோயங்கா நிர்வாக இயக்குநராகத் தொடர்வார்.  


ஜீலின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக புனித் கோயங்காவே தொடர்வார் என ஜீல் கூறியதையே, தற்போது ரிலையன்ஸ் ஊடக அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.


Also Read | ZEEL போர்டில் மாற்றம் செய்ய இன்வெஸ்கோ அடம் பிடிக்கும் காரணம் 


ZEEL-Invesco இணைப்பு தொடர்பான விஷயத்தை அறிந்தவர்கள், இன்வெஸ்கோ பரிந்துரைத்த இயக்குநர்கள் குழுவின் 6 பெயர்கள் ஏதோ ஒரு வகையில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவை என்றும், இது இப்போது செபி மற்றும் பிற நிறுவனங்களால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் கூறுகிறார்கள்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஊடக அறிக்கையின்படி, "பிப்ரவரி/ மார்ச் 2021 இல், எங்கள் பிரதிநிதிகளுக்கும் மற்றும் ஜீ நிர்வாக இயக்குனர் திரு புனித் கோயங்காவுக்கும் இடையே நேரடியாக விவாதங்களை ஏற்பாடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உதவியது இன்வெஸ்கோ. நாங்கள் இணைவதற்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்தோம். ஜீ மற்றும் எங்கள் சொத்துக்களின் மதிப்பீடுகள் ஒரே அளவுருக்களின் அடிப்படையில் வந்தன. அனைத்து இணைக்கும் நிறுவனங்களின் பலத்தையும் பயன்படுத்தவும்,  ஜீயின் பங்குதாரர்கள் உட்பட அனைவருக்கும் கணிசமான மதிப்பு கொடுக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டோம்."


"இருப்பினும், திரு கோயங்கா மற்றும் இன்வெஸ்கோ இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. முதலீட்டாளர்கள் சந்தை கொள்முதல் மூலம் நிறுவனர்கள் எப்போதும் தங்கள் பங்கை அதிகரிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருந்தனர். நாங்கள் அனைத்து நிறுவனர்களையும் மதிக்கிறோம் மற்றும் எந்தவிதமான விரோதப் பரிவர்த்தனைகளையும் செய்யவில்லை. எனவே, நாங்கள் இதில் மேலும் தொடரவில்லை" என்று ரிலையன்ஸின் அறிக்கை தெரிவிக்கிறது.  


இன்வெஸ்கோவின் சதிக்கு பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா?


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மூலம் ஊடக அறிக்கை: முழுமையாக...


"ஜீ மற்றும் இன்வெஸ்கோ இடையேயான சர்ச்சைக்கு நாங்கள் வருந்தியதற்கு வருந்துகிறோம். ஊடகங்களில் வரும் செய்திகள் துல்லியமாக இல்லை".


"பிப்ரவரி/ மார்ச் 2021 இல், இன்வெஸ்கோ எங்கள் பிரதிநிதிகளுக்கும், ஜீயின் நிர்வாக இயக்குநருமான திரு புனித் கோயங்கா இடையே நேரடியாக விவாதங்களை ஏற்பாடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உதவியது".


"ஜீ மற்றும் எங்கள் அனைத்து சொத்துகளின் நியாயமான மதிப்பீடுகளில் எங்கள் ஊடக சொத்துக்களை ஜீயுடன் இணைப்பதற்கான ஒரு பரந்த திட்டத்தை நாங்கள் செய்திருந்தோம். ஜீ மற்றும் எங்கள் சொத்துக்களின் மதிப்பீடுகள் அதே அளவுருக்களின் அடிப்படையில் வந்தன. இந்த முன்மொழிவு அனைத்து இணைக்கும் நிறுவனங்களின் பலத்தையும் பயன்படுத்த முயன்றது மற்றும் ஜீயின் பங்குதாரர்கள் உட்பட அனைவருக்கும் கணிசமான மதிப்பை உருவாக்க உதவியிருக்கும்".


 Also Read | ஒன்று சேரும் Zee எண்டர்டெயின்மெண்ட்-சோனி பிக்சர்ஸ், முழு தகவல் இங்கே


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR