#TNAssembly: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை சட்டப்படி செல்லும்!
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை சட்டப்படி செல்லும் என்று சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
14:29 29-05-2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை சட்டப்படி செல்லும் என்று சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
12:09 29-05-2018
தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பான அறிக்கையை சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்கால் செய்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் வேண்டும் என்றும், பொதுமக்கள் உணர்ச்சி வசப்படாமலும் யாருடைய தூண்டுதலுக்கு ஆளாகாமலும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
144 தடை உத்தரவையும் மீறி சில அரசியல் கட்சிகள் ,அமைப்புகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினர் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்!
10:32 29-05-2018
சென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்க திமுக.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்துள்ளனர்.
இந்த ஆண்டும் ஜனவரி 8-ம் தேதி தமிழக ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெற்றது.
அதன்பின்னர், சட்டசபையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 15-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்று பிற்பகல் சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19 துவங்கி 22 வரை நடந்து முடிந்தது.
இந்நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 9-ந் தேதி வரை நடைபெறும். மொத்தம் 23 நாட்கள் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறள்ளது.
தொடர்ந்து, ஜூலை மாதம் 9-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 26-ம் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார். இடையில், ஜூன் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது!!