மத்தியப்பிரதேசம்: இந்தூரில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
மத்தியப்பிரதேசத்தில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கபட்டு உள்ளது.
மத்தியப்பிரதேச மாநில தலைநகரமான இந்தூரில் சர்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஹோட்டல், லாட்ஜு அடங்கிய 3 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டடம் மிகவும் பழமையானது.
இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்து விபத்துள்ளானது. இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு சுமார் 9.27 மணிக்கு நிகழ்ந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அருகில் இருப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவத்தை அறிந்த மீட்புக் குழுவினர் கட்டிடம் இடிந்து விழுந்து சுமார் 20 நிமிடங்கள் கழித்து வந்தனர். அங்கிருந்த மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எம்.ய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுவரை 10 பேர் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சுமார் 20-25 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு இந்தூர் மேயர் மாலினி கவுர் வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இந்தூர் மேயர் மாலினி கவுர் கூறியது, மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்தில் தயாராக வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.