முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய நளினியின் மனு தள்ளுபடி!
முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என கோரிய நளினியின் மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்!
சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என கோரிய நளினியின் மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என கோரிய நளினியின் மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
முன்னதாக, ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் கைதான நளினி 20 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி M சத்யநாராயணன், "இவ்வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என கோரிய மனுவில் தலையிட முடியாது" நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.