எம்பி சசிகலா புஷ்பா, ராமசாமியின் 2வது திருமணத்திற்கு மதுரை கோர்ட் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் திருமண விவகாரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 2வது திருமணம் செய்யக் கூடாது என  மதுரை கோர்ட் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர்.


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி. ராமசாமி என்பவரை மறுமணம் செய்து கொள்ளப்போவதாக திருமண பத்திரிக்கை ஒன்றில் வெளியானது. இதையடுத்து ராமசாமி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி சத்யபிரியா புகார் அளித்தார். 


இதைத் தொடர்ந்து மதுரை குடும்ப நல கோர்ட்டில் சத்யபிரியா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், சத்யபிரியா- ராமசாமி விவகாரத்து வழக்கு கோர்டில் நிலுவையில் உள்ளதால் ராமசாமி 2வது திருமணம் செய்யக்கூடாது என மதுரை குடும்ப நலகோர்ட் உத்தரவிட்டுள்ளது.