நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் தீக்குளிப்பு!
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் ரவி என்பவர் மதுரையில் தீக்குளிப்பு!
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
பாறைகளைக் உடைப்பதால் ஏற்படக்கூடிய அதிர்வுகளால், அருகில் உள்ள கேரளத்தின் இடுக்கி அணையும், தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்; அணுக்கழிவுகளைக் கொண்டு வந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவார்கள்; அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்து, செயற்கை நியூட்ரான்கள், இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும்.
இதை கண்டித்து பவேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து மதுரையில் மதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்தார்.
மதுரையில் மதிமுக தொண்டர் தீக்குளித்ததை பார்த்த வைகோ கண்ணீர் விட்டார்.இந்த நிகழ்வை தொடர்ந்து தொண்டர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என வைக்கோ தெரிவித்துள்ளார்.
தீக்குளித்த தொண்டரை காப்பாற்ற இயற்கை அன்னையிடம் கெஞ்சுகிறேன். தீக்குளித்த தொண்டரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள். என அவர் கதறினார்!
இதை பற்றிய மேலும் தகவல்கள் ஈதுவும் தெரிய வில்லை!