இனிமேல் குடிக்க மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்றக் கிளை. (Madurai high court branch)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். 


அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது : 


ALSO READ : பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்! தமிழக அரசு!


"நாங்கள் இருவரும் எங்கள் சக நண்பர்களான சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது வாய் தகராறு ஏற்படவே பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொள்கிறோம்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, (pugazhendhi) மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.!


ALSO READ : 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR