மதுரையில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவி 591 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
மதுரையில் உள்ள இலங்கை அகதிகள் முகமாமில் இருந்த மாணி 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நேற்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தில் இருந்தனர். தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் மொத்தம் 94.03 சதவிகிதமாக இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, மதுரை இலங்கை அகதிகள் முகமாமில் உள்ள மாணவி ஒருவர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளது பலருக்கும நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி
மதுரையில் உள்ள ஆனையூர் பகுதில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்த முகாமில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிக்ள மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த முகாமில் இருந்து இந்த வருடத்திற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 மாணவ,மாணவிகள் எழுதினர். அவர்களில் ஒருவர் உதயராஜ் என்பவரின் மகள் திரித்துஷா. இந்த மாணவி, கூடலூர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் படித்து வந்தார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், திரித்துஷா 591 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி எடுத்துள்ளார் என தெரிய வந்தது..
மேலும் படிக்க | “ஆடிட்டர் ஆக ஆசை” 600க்கு 600 மார்க் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவியின் கனவு!
600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்..
திருத்துஷா, தமிழில் 97 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்களும் எக்கனாமிக்ஸில் 99 மதிப்பெண்களும், வணிகவியல் 99 மதிப்பெண்களும், கணக்குப்பதிவியல் (accountancy) 100 மதிப்பெண்களும்,கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மொத்தமாக 600க்கு 591 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
“மருத்துவராக ஆசை..”
மாணவி திரித்துஷா அதிக மதிப்பெண்கள் எடுத்தது குறித்த கூறுகையில், பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அறிவியல் குரூப் எடுத்து மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் ஆனால் இலங்கை முகாமில் உள்ளதால் எங்களால் படிக்க முடியாது என்றும் கூறினார். அதனால்தான் காமர்ஸ் குரூப் எடுத்து படித்துள்ளேன் என்றும் அந்த மாணவி தெரிவித்தார். ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.
கல்வி உதவி அளிப்பதாக உறுதி..
591 மதிப்பெண் எடுத்த மாணவியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவருக்கு பரிசுகளும் வழங்கினர். மேலும், மாணவியிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படிப்பிற்கான கல்வி உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க | பிளஸ் 2 பொதுத்தேர்வு: பார்வையற்றோர் அரசுப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்ச
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ