பஞ்சாப் வங்கி ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோடிக்கு எதிராக மாகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் பகுதிக்கு உள்பட்ட கலந்தலா கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் சொந்த சொத்துக்களை அடையாளப் படுத்தும் விதமாகவும், சமீபத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் நீரவ் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், நீரவ் மோடி போன்ற ஆட்களுக்கு கோடி கணக்கில் கடன் கொடுக்க முன்வரும் வங்கிகள் அனைத்தும் ஏழை விவசாயிகளுக்கு 10000 கூட கடன் அளிக்க முன்வருவதில்லை.


இங்குள்ள ஏழை விவசாயிகளை சூசகமாக ஏமாற்றி விலை நிலங்களை ஏமாற்றி வாங்கிய மோடி-யை எதிர்த்தும், தங்களது நிலத்தின் மீது தங்களுக்குள்ள உரிமையினை வெளிகாட்டும் வகையில் இந்த "பூமி அண்டோலம்" போராட்டத்தினை நடத்தி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.



பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் இந்த நூதனப் போராட்டம் நாட்டு மக்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!