நாடு முழுவதும் “மகாவீர் ஜெயந்தி” கொண்டாப்படுகிறது. அதனையொட்டி தமிழக மக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது:-


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் “மகாவீர் ஜெயந்தி” வாழ்த்துச் செய்தி


அறத்தையும் அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரர் அவர்கள் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


“சுயத்தை வென்றால் மெய்ப்பொருள் அறியலாம்” என்னும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரர் அவர்கள், அகிம்சையைப் பின்பற்றி, வாய்மையைப் போற்றி, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து, அறநெறிகளை தவறாது பின்பற்றி, தனது போதனைகளுக்கு தனது வாழ்வையே எடுத்துக்காட்டாக விளங்கும்படி செய்தவர். 


பைல் லிங்க்- கிளிக்


இந்த இனிய நாளில், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வினை வாழ்ந்திட வேண்டும் என்ற பகவான் மகாவீரரின் உயரிய போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இவ்வாறு தனது வாழ்த்துச்செய்தியில் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.