ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த கும்பல், 8 வயது நிறைந்த அந்த சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து அறையினுள் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.


இந்த, கொடூர சம்பவம் குறித்து  மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் தன்னுடைய  டிவீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:_ அந்தச் சிறுமி உங்களுடைய சொந்த மகள் என்ற புரிதல் கூட ஏற்படவில்லையா. அவள் என்னுடைய மகள் இல்லை, ஆனால் ஒரு மனிதனாக, தந்தையாக, குடிமகனாக அந்த குழந்தையை பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருகிறது. 


மன்னித்துவிடு இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை. உன்னுடைய நீதிக்காக நான் போராடுவேன், குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது உன்னைப் போன்ற நிலை எந்த குழந்தைக்கும் வராமல் இருக்க போராடுவேன். உனக்காக துயரப்படுகிறேன், என்றுமே உன்னை மறக்கமாட்டேன் என்றார்.