பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் நடத்திய தாக்குதலில் உயிர் பிழைத்து வெளிநாட்டில் வசித்து வந்த மலாலா தற்போது 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் திரும்பி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் பிறந்தவர் மலாலா யூசப்சையி. இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார்.


இவர் பெண் குழந்தைகளின் கல்வியை எதிர்க்கும் தலிபான்கள் குறித்து ஒரு தனியார் செய்தி ஏஜென்சிக்கு உருது மொழியில் கட்டுரைகள் எழுதினார். 2012ம் ஆண்டு அக்போடரில் வீடு புகுந்து தலிபான் தீவிரவாதி சுட்டதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். 


தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த இவர், தொடர்ந்து பெண் கல்விக்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த, 2014ம் ஆண்டில் அவர் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பின் மலாலா மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மலாலாவின் வருகையை அறிந்த பாகிஸ்தான் மக்கள் டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.