புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் அவர்கள் கலந்துக்கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவிக்கையில்...



"நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு 1990 ஆம் ஆண்டே விதைப்போட்டவர் ராஜிவ் காந்தி அவர்கள். அம்முன்னேற்றத்தினை முன்னெடுத்து வந்தவர் திரு மன்மோகன் சிங் அவர்கள், ஆனால் தற்போது இதனை பாஜக அரசு சொந்தம் கொண்டாடுவது வேதனை.



ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியல் பணத்தினை எண்ணக்கூடாது? ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோயில் ஊழியர்கள் வேகமாக பணம் எண்ணுகின்றனர்.



14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது மன்மோகன் சிங் அவர்களின் மிகப்பெரிய சாதனை. பாஜக-வின் சாதனை என்பது மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் பின்தள்ளியது தான். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது தான் ஆளும் அரசாங்கத்தின் வெற்றி" என தெரிவித்துள்ளார்!