தமிழகம் முழுவதும் மே 5 பால் தட்டுப்பாடு ஏற்படும்?
வரும் மே 5ம் தேதி 35வது வணிகர் தின மாநாட்டில் பால் முகவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அன்றய தினத்தில் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்று பால்முகவர்கள் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
வரும் மே 5ம் தேதி 35வது வணிகர் தின மாநாட்டில் பால் முகவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அன்றய தினத்தில் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்று பால்முகவர்கள் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய வணிகர் மீட்பு மாநாட்டில் பங்கேற்க எங்களது சங்கத்திற்கு முறையாக அழைப்பு விடுத்த பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, பேரமைப்பின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பால் முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அனைவரும் அன்றைய தினம் தங்களின் பால் விற்பனை நிலையங்களையும், விநியோக மையங்களையும் அடைத்து வணிகர் தினத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை தருவார்கள்.எனவே, அன்று ஒருநாள் மட்டும் “தமிழகம் முழுவதும் பரவலாக பால் தட்டுப்பாடு ஏற்படும்” சூழ்நிலை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவைப்படும் பாலினை முதல் நாளே முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.