காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மதிமுக பொதுச் செயளாலர் வைகோ அவர்களின் மைத்துனர் மகன் நேற்று தீக்குளித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


வைகோ அவர்களின் துணைவியார் ரேணுகாதேவி அவர்ளின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன் சரவண சுரேஷ். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இவர் இல்லாதபோதிலும், நேற்றைய தினம் மதிமுக சார்பில் நடத்தப்பட்ட கருப்புக்கொடி ஆர்பாட்டத்தின் போது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டார்.


உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார்.