தனுஷ் எங்களுக்கு வேண்டும்: மதுரை ஆட்சியரிடம் மனு அளித்த தம்பதியினர்!!
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், ஆகையால் அவர் எங்களுக்கு வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், ஆகையால் அவர் எங்களுக்கு வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் போலியானவை என்று கதிரேசன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் தற்போது மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்களுடைய இறுதி காலத்தில் தனுஷ் அருகில் இருக்க வேண்டும் என்றும், அவரை மீட்டு தர வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர்வீரராகவ ராவ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.