சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த மெட்ரோ சேவை சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலுமான சுரங்கப்பாதை வழித்தடத்தில் செயல்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெட்ரோ சேவையை தொடங்கி வைத்து மிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்:-


மெட்ரோ திட்டத்துக்கான நிதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார். நாட்டிலேயே அதிக நீளமுள்ள சுரங்கப்பாதை சென்னையில் தான் உள்ளது. 2016ல் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ பாதை தொடங்கப்பட்டது. இதுவரை 1.64 கோடி பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். 


சென்னை மாநகரத்தை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலந்தூரில் இருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்  2-வது வழித்தடத்திற்கு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.


இவ்வாறு கூறினார்.B