இந்தியாவிற்கே தலைநகரமாக விளங்கிவரும் மருத்துவத்துறை சென்னை மருத்துவத்துறை தான் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தனியார் கண் மருத்துவமனையின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


இவ்விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்க நிகழ்வாக குத்துவிளக்கு ஏற்றி இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டனர்.


வெளிநாட்டிலிருந்து வந்திருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே சென்னை தான் ஒரு தலைநகரம் போல் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.