கேரளவில் அமைச்சர்கள் மற்றும் MLA-களுக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு!
கேரள அமைச்சர்கள், MLA-களின் மாதாந்திர சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் மசோதாவை அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.
திருவனந்தபுரம்: கேரள அமைச்சர்கள், MLA-களின் மாதாந்திர சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் மசோதாவை அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் மாதச் சம்பளம் 2012-ல் உயர்த்தப்பட்டது. அதற்க்கு பின்னர், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் வைத்து சட்டசபை உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்த முடிவு செய்தது.
இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.எம்.ஜேம்ஸ் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு மசோதா கேரள சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சர்களின் சம்பளம் மற்றும் படி-களை 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 90 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தவும், MLA-களின் சம்பளம் 39 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த மசோதா கேரள சட்டசபையில் நேற்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சம்பள உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.