6 தினங்களுக்கு முன்னதாக காணமால் போனதாக தேடப்பட்டு வந்த Phd மாணவி அட்ரீயீ மஜும்தார் பெங்களூரு விடுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரு பெல்லாந்தூர் பகுதியை சேர்ந்தவர் அட்ரீயீ மஜும்தார்(35). கனடாவின் டோரன்டோ பல்கலை கழகத்தில் மாந்தவியல் பிரிவில் Phd பயின்று வருகின்றார். சமீபத்தில் கனடாவில் இருந்து நாடு திரும்பிய இவர் பெங்களூருவின் பெல்லாந்தூரில் தன் பெற்றோர்களுடன் வசித்து வருகின்றார். 


கடந்த ஏப்ரல் 4-ஆம் நாள் தன் வீட்டை விட்டு வெளியேறிய அவர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து அவரது பெற்றோர்கள் அட்ரீயீ காணாமல் போய்விட்டதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் இவர் பெங்களூரு வொயிட்பீல்ட் பகுதியில் இருக்கும் பிரபல 5 ஸ்டார் விடுதியில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


முன்னதாக அட்ரீயீ-ன் நண்பர்கள் இவர் காணாமல் போன தகவல் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பியுள்ளனர். இந்த செய்தியினை பார்த்த சம்பந்தப்பட்ட 5 ஸ்டார் விடுதியின் ஊழியர் இவரை குறித்த தகவல் குறித்து அவரது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது விடுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட அவரது வீட்டினில் ஒப்படைக்கப்படுள்ளார்.


எனினும் அட்ரீயீ ஏன் தன் குடும்பத்தினை விட்டு தனியாக சென்று தங்கினார் எனவும், குடும்பத்தாருடன் அவருக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.