மொஹாலி: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தாயின் சடலத்துடன், வீட்டில் தனியாக 3 நாட்கள் 6-வயது சிறுவன் வசித்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப்பின் மொஹாலியை சேர்ந்தவர் ஜஷ்பிந்தர் கரூர்(35), மூன்று தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டில் இருந்த அவரது 6 வயது மகன் ஆரம்சிங் இந்த விவரம் குறித்து வெளியே யாருக்கும் தெரிவிக்காமல் தாயின் சடலத்துடன் வசித்துவந்துள்ளார்.


ஜஷ்பிந்தர் கரூரின் கணவர் ராணுவத்தில் வேலைப்பார்பதால் தன் மகனுடன் இவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தனது கணவருடன் சரியான வாழ்க்கை அமையாததால் தனது வாழ்க்கையினை முடித்துக்கொள்வதாக கடிதம் ஒன்று எழுதி பின்னர் தூக்கிட்டுள்ளார்.


3 நாட்கள் கழிந்து வீட்டில் இருந்து துற்நாற்றம் வரவே, அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று சம்பவம் குறித்து அறிந்துகொண்டனர். எனினும் இந்த 3 தினங்களும் அவரது மகன் ஆரம்சிங் இயல்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார். தினமும் குளித்த, ஆடைகளை மாற்றிக்கொண்டு அப்பகுதி சிறுவர்களுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இதுகுறித்து காவல்துறையினர் சிறுவனிடம் கேட்கையில், தான் தூக்கிட்டுகொள்ள போவதாகவும், நீ நன்றாக இருக்க வேண்டும் எனவும் தன் மகனிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் இந்த விஷயம் குறித்து வெளியே கூறவில்லை எனவும், உணவு இல்லாததால் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த ப்ரட், பழங்களைத் தின்று இரண்டு நாட்களை கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


சிறுவனின் அறியாமையால் தாயின் இறப்பு குறித்து வெளியே தெரியாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.