ஹசின் ஜகான்-னின் குற்றச்சாற்றை மறுத்த பாகிஸ்தான் பெண் அலிஷ்பா
முகமது ஷமிக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருத்தி எனக் கூறி, தன்மீதான குற்றச்சாற்றை மறுத்துள்ளார் கொல்கத்தாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் அலிஷ்பா.
இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை தவறாகவும் பேசுகின்றனர். என்னை கொல்ல சதி செய்கின்றனர் என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார். என்னால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன் என ஹசின் ஜகான் செய்தியாளரிடம் கூறினார்.
என் மனைவி (ஹசின் ஜகான்)-ன் குற்றச்சாட்டு பொய்யானது: முகமது ஷமி!
இதற்கு முகமது ஷமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில்,
தற்போது நடைபெறும் சம்பவம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருக்கிறது. என் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனமும் பொய். இது எனக்கு எதிராகவும், என்னை அசிங்கபடுத்தவும், என் விளையாட்டை கெடுக்கவும்" முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, கொல்கத்தா போலீஸ் நிலையத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் வற்புறுத்தலின் பேரில் அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
முகமது ஷமியை நடுரோட்டில் வைத்து அடிக்க வேண்டும் -அவரது மனைவி
இந்நிலையில், முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகானின் குற்றச்சாட்டுக்கு நேற்று அலிஸ்பா பதில் கூறியுள்ளார். அதில், முகமது ஷமிக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருத்தி. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை பார்க்க சென்றிந்த போது, அவரை சந்தித்தேன். அதேபோல தான் துபாய் ஷார்ஜாவில் தங்கியிருக்கும் எனது சகோதரியை பார்க்க சென்ற போது முகமது ஷமியை சந்தித்தேன். இந்த சந்திப்பு எதார்த்தமான சந்திப்பு தான் என்றார். அவரை ஒரு ரசிகையாக தான் சந்தித்தேன். அவரை பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எதுவும் தெரியாது. அவரது மனைவி கூறுவது போல அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும் பணம் சம்பந்தமான எந்தவித பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றும், மேலும் என் மீதான குற்றச்சாற்று உண்மை இல்லை. உண்மையை எங்கு வேண்டுமானாலும் வந்து கூறுவேன் என தெரிவித்துள்ளார்.