இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை தவறாகவும் பேசுகின்றனர். என்னை கொல்ல சதி செய்கின்றனர் என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார். என்னால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன் என ஹசின் ஜகான் செய்தியாளரிடம் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என் மனைவி (ஹசின் ஜகான்)-ன் குற்றச்சாட்டு பொய்யானது: முகமது ஷமி!


இதற்கு முகமது ஷமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில்,


தற்போது நடைபெறும் சம்பவம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருக்கிறது. என் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனமும் பொய். இது எனக்கு எதிராகவும், என்னை அசிங்கபடுத்தவும், என் விளையாட்டை கெடுக்கவும்" முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.


இதையடுத்து, கொல்கத்தா போலீஸ் நிலையத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் வற்புறுத்தலின் பேரில் அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.


ஹசின் ஜகான்-னின் குற்றச்சாற்றை மறுத்த பாகிஸ்தான் பெண் அலிஷ்பா


ஹசின் ஜகானின் புகாரை அடுத்து, முகமது ஷமியின் பயண விவரங்களை அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கொல்கத்தா போலீஸார் கடிதம் அனுப்பினர். கடிதத்தை அடுத்து, முகமது ஷமி துபாய் சென்றது உண்மைதான். பிப்ரவரி 17 மற்றும் 18-ம் தேதிகளில் துபாய் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் என பிசிசிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.


முகமது ஷமியை நடுரோட்டில் வைத்து அடிக்க வேண்டும் -மனைவி ஆவேசம்


இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க தொடர்ந்து கடந்த சில நாட்களாக முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் முயற்சி செய்தார். அதற்கு பலன் கிடைத்துள்ளது. அதாவது, முதல்வர் மம்தா பானர்ஜி அவரை(ஹசின் ஜகான்) சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிகிழமை(தேதி 23) மேற்கு வங்க முதல்வர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகானை சந்தித்து பேச உள்ளார் என முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.