தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 2.52 லட்சம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கபட உள்ளதாக உணவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில்  மின்னணு குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன் பின் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மின்னணு குடும்ப அட்டைகளைத் தயாரிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியது. 


இதற்காக மாவட்ட வாரியாக குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்கள் தொகுக்கப்பட்டு அவை உணவுத் துறையின் தகவல்களுடன் இணைக்கப்பட்டன. 


நான்கு ஆண்டுகள் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, மின்னணு குடும்ப அட்டை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தால், இரண்டு இடங்களில் பதிவான அட்டைகள் , போலியான பெயர்களில் இருந்த சுமார் 6 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. 


அதன் பின், தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் கார்ட்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் எனவும், மின்னனு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. 


தமிழகத்திலேயே அதிகபட்சமாக வடசென்னை மாவட்டத்தில்தான் அதிக அளவு 10 லட்சத்து 18 ஆயிரத்து 367 மின்னணு குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 2.52 லட்சம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கபட உள்ளதாக உணவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த காகிதத்தாலான அட்டைகளுக்குப் பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்ட அதேவேளையில், புதிதாக விண்ணப்பிப்போருக்கும் அட்டைகள் கொடுக்கப்படுகின்றன. அதில், விழுப்புரத்தில் அதிகமாக 30 ஆயிரத்து 188-ம், சேலத்தில் 15 ஆயிரத்து 891 அட்டைகளும் அளிக்கப்பட்டுள்ளன என்றார்.