பிரேஸிலில் நடைப்பெறும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மொபைல் நிறுவனமான Motorola தனது Moto G6, Moto G6 Plus, Moto G6 Play என்னும் 3 போன்களை அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஸ்மார்ட் போன்களை குறித்த விமர்சனங்களும், விலைகளின் கணிப்பும் கடந்த 3 வாரங்களாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள விலைகளின் பட்டியல் மற்றும் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Moto G6 Play - $199 (இந்திய மதிப்பில் ரூ.13000)
Moto G6 - $249 (இந்திய மதிப்பில் ரூ.16000)
Moto G6 Plus குறித்த தகவல்கள் இல்லை.


Moto G6 Play ஆனது 5.7"HD திரையுடன் வெளிவருகிறது, அதேப்போல் 
Moto G6 Plus ஆனது 5.93" HD திரையுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Moto G6 ஆனது (12MP+5MP) என இரண்டு லென்ஸ் பின் கேமிரா திரனுடனும், 16MP முன்கேமிராவுடனும் வெளியாகிறது. மேலும் Snapdragon 450 processor, 4GB RAM மற்றும் 3,000mAh பேட்டரி திறனுடனும் வெளியாகிறது.


Moto G6 Plus ஆனது, Qualcomm Snapdragon 630 processor மற்றும் 3,200mAh பேட்டரி திறனுடனும் வெளியாகிறது.


Moto G6 Play ஆனது Snapdragon 427  processor, 13MP பின் கேமிரா, 8MP முன்கேமிரா மற்றும் 4,000mAh பேட்டரி திறனுடனும் வெளியாகிறது.