1) பிளான் பண்ணி பண்ணனும் (Plan Panni Pannanum) : 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நகைச்சுவை கலந்த தமிழ் படம் "பிளான் பண்ணி பண்ணனும் (Plan Panni Pannanum)".  இந்த படத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரோபோ சங்கர், மன்மதன், பாலா சரவணன் ராஜு, பூர்ணிமா ரவி, டைகர் கார்டன் தங்கதுரை, ஆடுகளம் நரேன், ரேகா, விஜி சந்திரசேகர், ரவி வெங்கட்ராமன், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை நேர்மறை அச்சு ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 


2) வேலன் (Velan) : 


கவின்.எம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம் "வேலன் (Velan)".  இப்படத்தில் முகின் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், பிரபு, தம்பி ராமையா, சூரி, பிரிகிடா, ஜோ மல்லூரி ஆகியோர் நடித்துள்ளனர்.  


Velan


3) தண்ணி வண்டி (Thanni Vandi) : 


மாணிக்க வித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "தண்ணி வண்டி (Thanni Vandi)".  இதில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா கதாநாயகனாக நடித்துள்ளார்.  மேலும் இப்படத்தில் சம்ஸ்கிருதி, ராசு மதுரவன், மனோஜ் குமார், தருண் கோபி, தம்பி ராமையா, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ஆகியோர் நடித்துள்ளனர்.  


ALSO READ | டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்!


4) தீர்ப்புகள் விற்கப்படும் (Theerpugal Virkkapadum) : 


தீரன் இயக்கத்தில், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் "தீர்ப்புகள் விற்கப்படும்". இந்த படத்தை ஹனி பீ கிரேஷன்ஸ் இன் அசோஸியேஷன் வித் இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  சத்யராஜ், வெங்கட் பாரதி, ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன், மதுசூதன ராவ், ஸ்ரீரஞ்சனி, லிசி ஆண்டனி, ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர்.  


5) சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை (Sarkarai Thookalai Oru Punnagai) : 


மகேஷ் பத்மநாபன் என்பவரது இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம்  'சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை'.  இப்படத்தை நபீஹா மூவிஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ருத்ரா என்பவரும் , கதாநாயகியாக சுபிக்ஷாவும் நடித்துள்ளனர்.  மேலும் இதில் 'ராட்சசன்' வினோத் சாகர், பீட்டர், கணபதி, சுனந்தா, மகேஷ் பத்மநாபன், பீட்டர் ஹார்டலீ ஆகியோர் நடித்துள்ளனர். 
 
6) காட்டுப்புறா (Kaatupura) : 


பாபு கணேஷ் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம் "காட்டுப்புறா (Kaatupura)".  இப்படத்தில் ரிஷிகாந்த், ராகுல் ரவி, நேத்ரா, சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  


7) சிலாட்டா (silaattaa) : 


கே.பி.எஸ்.சாமி இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம் "சிலாட்டா (silaattaa)".  இப்படத்தில் ராஜேஷ் பாலகிருஷ்ணன், நீனு, சாண்ட்ரா பாபு, கே.பி.எஸ்.சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.  


8) ஈபிகோ302 (EPCo302) : 


சலங்கை துரை இயக்கத்தில்  தமிழில் உருவாகியுள்ள படம் " ஈபிகோ302 (EPCo302)".  இப்படத்தில் கஸ்தூரி , நாக சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். 


ALSO READ | வலிமையில் அஜித்தின் கேரக்டர் பற்றி கூறிய H.வினோத்!


இந்த திரைப்படங்கள் தவிர, சிட்டிசன் திரைப்படத்தை இயக்கிய சரவண சுப்பையா இயக்கியுள்ள மீண்டும், கரையேறும் கனவுகள், தமிழ் ராக்கர்ஸ், ஊனானன், ஒபாமா, லேபர், லிபூடி ஆகிய திரைப்படங்களும் திரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR