டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்!

இந்த வருடத்தின் இறுதியான டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் 14 படங்கள் ரிலீசாகுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2021, 09:30 PM IST
டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்! title=

இந்த வருடத்தின் இறுதியான டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் 14 படங்கள் ரிலீசாகுகின்றன.  

1) பிளான் பண்ணி பண்ணனும் (Plan Panni Pannanum) : 

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நகைச்சுவை கலந்த தமிழ் படம் "பிளான் பண்ணி பண்ணனும் (Plan Panni Pannanum)".  இந்த படத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரோபோ சங்கர், மன்மதன், பாலா சரவணன் ராஜு, பூர்ணிமா ரவி, டைகர் கார்டன் தங்கதுரை, ஆடுகளம் நரேன், ரேகா, விஜி சந்திரசேகர், ரவி வெங்கட்ராமன், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை நேர்மறை அச்சு ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

2) வேலன் (Velan) : 

கவின்.எம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம் "வேலன் (Velan)".  இப்படத்தில் முகின் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், பிரபு, தம்பி ராமையா, சூரி, பிரிகிடா, ஜோ மல்லூரி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

Velan

3) தண்ணி வண்டி (Thanni Vandi) : 

மாணிக்க வித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "தண்ணி வண்டி (Thanni Vandi)".  இதில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா கதாநாயகனாக நடித்துள்ளார்.  மேலும் இப்படத்தில் சம்ஸ்கிருதி, ராசு மதுரவன், மனோஜ் குமார், தருண் கோபி, தம்பி ராமையா, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

4) தீர்ப்புகள் விற்கப்படும் (Theerpugal Virkkapadum) : 

தீரன் இயக்கத்தில், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் "தீர்ப்புகள் விற்கப்படும்". இந்த படத்தை ஹனி பீ கிரேஷன்ஸ் இன் அசோஸியேஷன் வித் இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  சத்யராஜ், வெங்கட் பாரதி, ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன், மதுசூதன ராவ், ஸ்ரீரஞ்சனி, லிசி ஆண்டனி, ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

Tv

5) மீண்டும் (Meendum) : 

சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணா சுப்பையா மீண்டும்(Meendum) படத்தை இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

 

6) சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை (Sarkarai Thookalai Oru Punnagai) : 

மகேஷ் பத்மநாபன் என்பவரது இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம்  'சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை'.  இப்படத்தை நபீஹா மூவிஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ருத்ரா என்பவரும் , கதாநாயகியாக சுபிக்ஷாவும் நடித்துள்ளனர்.  மேலும் இதில் 'ராட்சசன்' வினோத் சாகர், பீட்டர், கணபதி, சுனந்தா, மகேஷ் பத்மநாபன், பீட்டர் ஹார்டலீ ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

7) ஊனானன் (Oonaanan) : 

ஊனானன் (Oonaanan) திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

8) நீ சுடத்தான் வந்தியா (Nee Sudathaan Vandhiyaa) : 

கே.துரைராஜ் இயக்கத்தில் தமிழில் சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லராக உருவாகியுள்ள படம் "நீ சுடத்தான் வந்தியா".  இப்படத்தில் டிக்டாக் புகழ் இலக்கியா நடித்துள்ளார்.  மேலும் இதில் புதுமுக நடிகர் அருண்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.  சென்சார் பிரச்சனை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிபோனதையடுத்து, இப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

 

9) காட்டுப்புறா (Kaatupura) : 

பாபு கணேஷ் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம் "காட்டுப்புறா (Kaatupura)".  இப்படத்தில் ரிஷிகாந்த், ராகுல் ரவி, நேத்ரா, சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

10) சிலாட்டா (silaattaa) : 

கே.பி.எஸ்.சாமி இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம் "சிலாட்டா (silaattaa)".  இப்படத்தில் ராஜேஷ் பாலகிருஷ்ணன், நீனு, சாண்ட்ரா பாபு, கே.பி.எஸ்.சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

11) ஒபாமா (Obama) : 

ஒபாமா (Obama) திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

12) ஈபிகோ302 (EPCo302) : 

சலங்கை துரை இயக்கத்தில்  தமிழில் உருவாகியுள்ள படம் " ஈபிகோ302 (EPCo302)".  இப்படத்தில் கஸ்தூரி , நாக சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

13) கரையேறும் கனவுகள் (Karaiyerum Kanavugal) : 

கரையேறும் கனவுகள் (Karaiyerum Kanavugal)  திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

14) தமிழ் ராக்கர்ஸ் (TamilRockers) : 

தமிழ் ராக்கர்ஸ் (TamilRockers)  திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

ALSO READ | வலிமையில் அஜித்தின் கேரக்டர் பற்றி கூறிய H.வினோத்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News