‘2.0’ இதுவரை நடந்தது என்ன?: இன்று மாலை 6 மணிக்கு
ரஜினியின் ‘2.0’, இதுவரை நடந்தது என்ன?, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.
ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் சில துளிகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26 அன்று வெளிவரவுள்ளது. முன்னதாக இந்த வருடம் தீபாவளிக்கே வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதி தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.