பாகுபலி 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 5 கோடி பேர் பார்த்தனர்
ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி பாகுபலி 2 வெளிவருகிறது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரைலர் மார்ச் 16-ம் தேதி தேதி வெளியிட்டது. யூடியூபில் வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் 5 கோடி ரசிகர்கள் டிரைலரை பார்த்து உள்ளனர். இந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பேர் பார்த்த டிரைலர் இது தான். இதனை படத்தின் இயக்குனர் ராஜமவுலி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.