தெலுங்கு நடிகர் வீட்டில் இருந்து 24 லட்சம், ஸ்வைப்பிங் மெஷின் பறிமுதல்!
நடிகர் நாக சௌர்யா வீட்டில் இருந்து 24 லட்சம், ஸ்வைப்பிங் மெஷின் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
ஹைதரபாத் : நாக சௌர்யா ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தெலுங்கு பட உலகில் முண்ணனி வகிக்கும் நடிகர்களுள் இவரும் ஒருவர். இவர் 2011-ம் ஆண்டு வெளிவந்த கிரிக்கெட், கேர்ள்ஸ் அண்ட் பீர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.ஆந்தாலஜி படமான 'சந்தமாமா கதாலு' படத்தில் நடித்ததன் தேசிய திரைப்பட விருதினை வென்றார். மேலும் இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' என்கிற பேய் படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்து இருந்தார்.இந்த படம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோடு மஞ்சுரேவுலாவில் நாகசவுரியாவிற்கு சொந்தமாக ஒரு பண்ணை வீடு உள்ளது.இந்த பண்ணை வீட்டில் சில சமூக விரோத செயல்கள் நடந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கிடைத்த தகவலின் அடிப்படையில்,நாக சௌர்யாவிற்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டிற்கு சென்ற போலீசார் அதிரடியாக சோதனை நடத்த தொடங்கினார்கள்.அப்போது அந்த இடத்தில் கிட்டதட்ட 24 நபர்களுடன் நாக சௌரியாவின் நெருங்கிய நண்பரான சுமந்த் என்பவர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.இதனை கண்ட போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அவரை கைது செய்ததோடு அந்த பண்ணை வீட்டில் இருந்த ரூ.24 லட்சம் ரொக்கம், ஸ்வைப்பிங் மெஷின், சீட்டு கட்டுகள், கார்கள், மொபைல் போன்கள் போன்றவற்றையும் சோதனையில் ஈடுபட்ட போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரித்ததில் இந்த பண்ணை வீட்டினை ஒரு IAS அதிகாரியிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு நாக சௌர்யா வாங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த சூதாட்டத்தில் நாக சொரியாவுக்கு நேரடி தொடர்பு உள்ளதா? இல்லை அவருக்கு தெரியாமல் குற்றங்கள் நடக்கிறதா? என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது, தொடர்கதையான ஒன்றாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
ALSO READ 'ஜெய் பீம்' படத்திற்கு பெருமை சேர்த்த தமிழக முதல்வர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR