நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக அரபிக் குத்து அண்மையில் வெளியிடப்பட்டது. பட்டி தொட்டியெங்கும் கலக்கிவரும் அப்பாடல் யூடியூப்பில் அதிவிரைவில் 10 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் எனும் சாதனையையும் படைத்தது. முன்னதாக தனுஷின் ரவுடி பேபி பாடல் இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில் அரபிக் குத்து அதனை அசால்ட்டாக முந்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் பாடலே பெரும் கவனம் ஈர்த்துள்ளதால் இதன் மற்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அந்த வகையில், இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற 20ஆம் தேதி நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் படங்களின் ஆடியோ ரிலீஸ் சர்ச்சையாக மாறுவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. தனது திரைப்படங்களின் ஆடியோ ரிலீசையொட்டிய விஜய்யின் பேச்சுகள் திரை வட்டாரம் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாவது வழக்கமாக மாறிவிட்டதால் பீஸ்ட்டின் ஆடியோ ரிலீஸும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


                                                                                                        


இந்நிலையில் ஆடியோ ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் விழா,  சர்கார் மற்றும் பிகில் படங்களின் ஆடியோ ரிலீஸ் நடந்த அதே சென்னை தாம்பரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் விஜய் ரசிகர் மன்றங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறப்பம்சமாக, இவ்விழாவின் மேடையானது, அச்சு அசலான ‘ஷாப்பிங் மால்’ செட் போல வடிவமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மால் முக்கிய லொக்கேஷனாக அமைந்துள்ளதாகவும், அதை அடிப்படையாகக் கொண்டே ஆடியோ ரிலீஸ் விழாவிலும் ஷாப்பிங் மால் செட் போடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட்? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


விஜய்யின் பாடல்களைக் கேட்க ஆர்வமாக இருந்துவந்த ரசிகர்கள், இப்போதெல்லாம் அவரது ஆடியோ ரிலீஸ் பேச்சுகளைக் கேட்கவும் மிகவும் ஆர்வமாக இருந்துவருகின்றனர். இந்நிலையில் பீஸ்ட் குறித்து வெளியாகியிருக்கும் இத்தகவலால் விழாவின் செட்டைக் காணவும் தற்போது ஆர்வமாகியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR