53% வரி: தமிழர்களுக்கு இனி சினிமா பகல் கனவு தான்!
"நாம் 28% ஜி.எஸ்.டி செலுத்துகிறோம், இந்நிலையில் உள்ளூர் பொழுதுபோக்கு வரி விதிக்கப்படக் கூடாது. முந்தைய வரி விதிப்பை விட இது அதிகமாகவே உள்ளது. இது நாட்டின் ஒருன்பான்மைக்கு புரம்பானது"- தீபக் ஆஷர், இந்திய மல்டிலெக்ஸ் அசோஸியேஷன் தலைவர்.
தமிழக சினிமா ரசிகர்கள் தற்போது, ஜி.எஸ்.டி மற்றும் உள்ளூர் வரிகளின் என இரட்டை வரிகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை கானும் ஆசை ரசிகர்களின் மத்தியில் பகல் கனவாகவே மாறி வருகிறது எனலாம்!
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததை அடுத்து, நாடு முழுவதும் சினிமா டிக்கெட்களில் பொழுதுபோக்கு வரியானது சுமார் 20% வரையில் மாற்றம் ஏற்படுத்தியது. ரூ.100 க்கு மேல் வழங்கப்படும் திரைப்பட டிக்கெட்டுக்களில் 28% ஜி.எஸ்.டி., வரியும், ரூ.100 க்கு குறைவாக வழங்கப்படும் திரைப்பட டிக்கெட்டுக்களில் 18% ஜி.எஸ்.டி., வரியும் வசூளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் உள்ளூர் கேளிக்கை வரிகளும் தமிழக மக்களை அதன் பங்குக்கு வதைக்கின்றது!
தமிழகத்தை பொருத்தவரையில் ஜி.எஸ்.டி., வரிகளுடன் சேர்த்து தமிழ் திரைப்படங்களுக்கு 8%, தமிழ் அல்லாத இந்திய திரைப்படங்களில் 15% மற்றும் ஆங்கில திரைப்படங்களில் 20% என கேளிக்கை வரி வசூளிக்கப்படுகின்றுது. எனவே ஏறக்குறைய சுமார் 53% வரையில் வரிகளை சேலுத்தியே தமிழக மக்களை திரைப்படங்களை பார்க்கவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
சென்னையில் பெரும்பாலும், ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களை திரையிட்டு வரும் INOX Leisure Ltd மற்றும் PVR Cinemas போன்ற மல்டிப்ளக்ஸ்களில் இனி திரைப்படம் பார்க்கவேண்டுமெனில் தமிழ் ரசிகர்களை 48% மற்றும் 53% வரிகளை கூடுதலாக செலுத்தினால் மட்டுமே திரைப்படங்களை பார்க்க இயலும்!...
இதுகுறித்து தீபக் ஆஷர் கூறுகையில்:-
"எங்கள் கோரிக்கை எளிதானது; நாங்கள் 28% ஜி.எஸ்.டி. செலுத்தி வருகிறோம், இது வழக்கமாக வசூளிக்கப்படும் பொழுதுபோக்கு வரியை விட அதிகமானதாகும். எனவே உள்ளூர் கேளிக்கை வரி விதிக்கப்படக்கூடாது." என தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவிக்கையில்; "விஜய்-ன் மெர்சல் திரைப்படத்தினை ரூ.1,000 கொடுத்து பார்த்தேன்... டிக்கெட் விலை உயர்வு என்றபோதிலும், திரைப்படங்களை திரையரங்குகளில் மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஆகையால் இந்த விலை உயர்வானது சாமானியர்களுக்கு பெருத்த இடியாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் உயர்ந்த விலையில் விற்பனை செய்வபடுவதற்கும், பார்க்கிங் கட்டணங்களை அதிக அளவில் வசூளிப்பதிலும் அரசாங்கம் தடையீடல் வேண்டும். " என தெரிவித்துள்ளார்!
இந்நிலையில் தமிழக அரசு, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.
இதனையடுத்து அக்டேபர் 13-ஆம் நாள், தமிழக முதல்வரை சந்தித்தப்பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளதாவது, கேளிக்கை வரியினை முழுமையாக அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது, ஆனால் 10% இருந்து 8% வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும், தற்போது நிலவிவரும் இரட்டை வரி விதிப்பானது தியேட்டர்களில் டிக்கெட் விலையினை அதிகரித்துள்ளது என்பதை மறுக்க இயலாது.